Tuesday, February 17, 2015

கொஞ்சம் சிரிங்க பாஸ்...!!!
மனைவி : குழந்தைகிட்ட என்ன சொன்னீங்க..??
உடனே அழுகையை நிப்பாட்டிட்டானே...!!!
கணவன் : இப்பிடியே அழுதுகிட்டுருந்தா அம்மாவை
வந்து தாலாட்டு பாட சொல்லுவேன்னு சொன்னேன்...!!!
ங்ஙே

கணவன : ச்சீய்! காப்பியாடி இது?
நாய்கூட இதை குடிக்காது.
மனைவி : ஆமாங்க! அதனாலதான் நம்ம
நாய்க்கு ஹார்லிக்ஸ் போட்டு வச்சுருக்கேன்.
கணவன் : ????!!!!

100% வொர்க் அவுட் ஆகுற ஒரு அரிய தகவல்...!!!
*******************************************************************
உங்க வீட்டுக்கு நண்பரோ, விருந்தாளிகளோ வரும்போது
முதல் வேலையா அவங்களுக்கு குடிக்க தண்ணீர் தருவதை
விட, உங்க மொபைலை சார்ஜ்ல போடணுமான்னு கேளுங்க...!!
அவங்க கண்ணில தண்ணியே வந்திரும்... அப்புறம்
உங்களுக்குள்ள நட்போ, உறவோ அதிகமாயிடும்...!!!
அதுக்கப்புறம் காபி / டீ / கூல்ட்ரிங்க்ஸ். இதுல எது வேணும்னு
கேக்குறதுக்குப் பதிலா, உங்க மொபைலுக்கு இன்டர்நெட்
Wi-Fi பாஸ்வர்ட் வேணுமான்னு கேட்டுப்பாருங்க...!!
அப்புறம் நீங்களே எதிர்பார்க்காத அளவுக்கு
அவங்க அப்படியே உடைஞ்சுபோய், கண்ணீர் தளும்ப
பேச முடியாம உங்களை இறுக்கமா கட்டிப்புடிச்சுப்பாங்க...!!!
இது மட்டும் நடக்கலைன்னா... என்கிட்ட சொல்லுங்க...!!!
நானே வர்றேன்... இதை நடத்த...!!!

”5 வயது சிறுமி வேலைக்குச் சென்றுவந்த
தன் அம்மாவிடம் கேட்டாள்…..
‘ஏம்மா நம்ம வீட்டு பீரோ சாவியை
ஆயாகிட்ட கொடுத்துட்டு போகல?’
’அதைப் போய் யாராவது ஆயாகிட்ட
கொடுப்பாங்களா?’
’ஏம்மா நம்ம பீரோவுல இருக்குற நகை,
பணத்தை எல்லாம் ஆயாகிட்ட
கொடுத்துட்டுப் போகல?’
’ஷ்ஷு … அதையெல்லாம் ஆயாகிட்ட
கொடுக்கக் கூடாது.’
‘ஏம்மா உங்க ஏ.டி.எம் கார்டை ஆயாகிட்ட
கொடுத்துட்டுப் போகல?’
‘என்ன கேள்வி இது? நீ சொல்றதெல்லாம்
ரொம்ப முக்கியமான பொருள்கள். அதை
எல்லாம் ஆயாகிட்ட கொடுக்கக் கூடாது!’
’அப்போ ஏம்மா என்னை மட்டும்
ஆயாகிட்ட விட்டுட்டுப் போற?
உனக்கும் அப்பாவுக்கும்
நான் முக்கியம் இல்லையா?
இம்முறை அம்மாவிடம் பதில் இல்லை.
கண்களில் நீர் மட்டுமே இருந்தது...!!!

No comments: