Wednesday, June 13, 2018

புதியதாக வேதியலில் சேர்க்கப்பட்டு உள்ள தனிமம்.,

புதியதாக வேதியலில் சேர்க்கப்பட்டு உள்ள தனிமம்.,

பெயர் : மனைவி

குறியீடு: Wf

அணு நிறை: முதலில் பார்க்கும்போது இலகுவாக தெரியும், நாட்கள் ஆக ஆக எடை கூடிக் கொண்டே போகும்.,

உடற்கூறு தன்மை:
எப்பொழுதும் அன்பில் உருகக் கூடியது.,

எப்போதும் அன்பில் உறையக்கூடியது.,

தவறாக பயன்படுத்தினால்  கொதிக்ககூடியது.,

வேதியல் தன்மைகள்:

எளிதில் எதிர்வினை புரியக் கூடியது.,

அதிக நிலைத் தன்மை அற்றது.,

தங்கம், வெள்ளி, வைரம், வைடூரியம், பணம், காசு, காசோலை என அனைத்தையும் ஈர்க்கும் தன்மை கொண்டது.,

பணமதிப்பை குறைக்கும் வல்லமை கொண்டது.,

காணும் இடங்கள்;

அழகு நிலையம், நகைக் கடைகள், பன்னாட்டு நவீன வணிக வாளகங்கள் மற்றும் ஐஸ் கிரீம் கடைகள்.,

கணவனின் உறவினர்களை கண்டால் எளிதில் தீ பற்றக் கூடியது.,

தனது பெற்றோர்களுடன் இருக்கும் போது இன்பம், மகிழ்ச்சி, குதூகலம், துள்ளல், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என ஒரே  பன்முக தன்மை உடையதாக இருக்கும்.,

மனப்பான்மை:

நானே இந்த பூலோகத்தின் ராணி, என்னை மிஞ்சிய அழகும், திறமையும், ஆற்றலும், அறிவும் இந்த பிரபஞ்சத்தில் இல்லை என்ற நினைப்பு.,

ஆக மொத்தத்தில் புரிந்து கொள்ளவே முடியாத புதிராக இருக்கும்.,

No comments: