Tuesday, February 17, 2015

போன் பண்ணுனா எடுத்தவுடனே
ஹலோன்னு சொல்லறதுதானே
பாஸ் உலக வழக்கம்...??
ஆனா எனக்கு போன் பண்ணறவனுங்க 
மட்டும் எடுத்தவுடனே
காசு எப்ப தருவே ன்னு கேட்கறாங்க...!!!
ஒருபயலுக்கும் நாலேஜ்ஜே தெரியலை பாஸ்...!!!

முன்னாடியெல்லாம் போட்டவுடனே
ஜிவ்வுன்னு ஏறும்...!!!
இப்பல்லாம் கொஞ்சம் லேட்டாத்தான் ஏறுது...!!!
,
,
,
,
,
,
,
,
,
நான் போஸ்ட்க்கு வர்ற லைக்ஸை சொன்னேன். பாஸ்...!!
உங்களுக்கு எப்ப பாரு சரக்கு நினைப்புதானா...???
நீங்கலெல்லாம் திருந்தவே மாட்டிங்களா...???

அவன் : கல்யாணத்துக்கு முன்னாலே கண்ணாடி போட்டா,
அழகு போயிடும்னு நினைச்சு போடாதது தப்பாப்போச்சு...
இவன் : ஏன் என்னாச்சி?
அவன் : பொண்ணு பாத்தப்போ அழகா தெரிஞ்சா.
கல்யாணம் ஆகி இப்போ கண்ணாடி போட்டுக்கிட்டு
பாக்கிறேன்...
ப்ப்ப்பா...!!! பேய் மாதிரி இருக்கா...!!!

மனைவியோட பீரோவக் குடைஞ்சுக்கிட்டிருந்த கணவன் அவங்களோட SSLC TC ரிப்போர்ட் கார்டுல எழுதியிருந்த வாக்கியத்தைப் படிச்சுட்டு....
"பொய்...பொய்...பொய்...அப்பட்டமான பொய்...
யாரோ மனசாட்சியே இல்லாதவங்க தான்
இதை எழுதியிருக்கணும்..." அப்படீன்னு கத்தினாரு....!!!
அப்படியென்ன எழுதிருந்துச்சு அதுல...??
கேரக்டர்: அமைதியான, அடக்கமான, அறிவாளியான மாணவி....
இன்னும் முடியலை....
மனைவி சொன்னாங்க....
"மாணவி"ன்னு தானே போட்டிருக்கு...!!
"மனைவி"ன்னா போட்டிருக்கு...???

No comments: